வேதச்சொற்கள்
About Me
Vedharaman
View my complete profile
26 Sept 2015
இறைவா ஓ! இறைவா
வெள்ளாவி வெளியில் தவழ்ந்திடும் முன்
கரும்புகை அதனில் சூழ்ந்தனவோ..
இடியொலிக் காதினில் கேட்டிடும் முன்
மின்னொளி மண்ணைத் தாக்கியதோ..
Read more »
9 Aug 2015
உலகில் ஓர் ஓரறிவு
என்றாயினும் யானும் நல்லவர்களைக் கண்டுவிட
எந்நாளும் புரிகிறேன் ஒற்றைக்காலில் தவம்..
ஆயினும் எங்கும் மனிதர்களே தென்படுகின்றனர்..!
Read more »
24 Mar 2015
வீடு
சொந்த வீட்டில்
வாடகைக்குக் குடியமர்தல்..
மாதத்தவணைக் கடனில்
அடுக்குமாடிக் குடியிருப்பில்..!
10 Feb 2015
அருள் தேவி
அடிமுடி இல்லாத நாதனிடம் - நீயும்
இடமொரு பாகமாய் நின்றாயடி..
ஆடி அடங்கிடும் வாழ்க்கைதனில் - ஒரு
பிடித்தமாய் வந்தருள் புரிவாயடி..!
இலக்கியம் பலவும் உள்ளதடி - அவை
இலக்குமி நின்புகழ் சொல்லுமடி..
கலங்கரை விளக்காய் காப்பாயடி - எந்தன்
கலங்கிய மனத்துயர் தீர்ப்பாயடி..!
செந்தேனில் தெளிந்திடும் சுவையைப்போல - ஏகன்
சீரோனில் ஒன்றிடக் கலந்தாயடி..
சிதறிய சிந்தையும் தெளிவடைய - உந்தன்
செந்தாள் வணங்கி நின்றேனடி..!
26 Apr 2014
காப்பான் கண்ணன்
சரியெனும் தவறிலும்
சரிவில் தவறும் சரியிலும்
சர்வம் காக்க கண்ணன் வருவான்..!
வாட்டம் கூட்டி; வலிகளில் துவளும்
வாழ்க்கையின் இருள்சூழ் அறையில்
வாயிற்கதவாய் கண்ணன் காப்பான்..!
காணாதக் கானல் கண்ணீரிலும்
கண்டுவிட்ட மனதின் மென்சோகத்திலும்
எண்ணங்களின் குழப்பம் துடைக்கவே
கண்ணன் தன் வருடும் விரற்கொண்டு
உன்னை அணைக்க மலர்ந்து நிற்பான்..!
வருந்தாதே மனமே கலங்காதே..
வருவான் கண்ணன் துணையாகவே..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)