24 Sept 2016

பட்டாம்பூச்சி

வீட்டின் மூலை ஓரத்தில்
விட்டுவிட்டு எரியும் விளக்கொளிக் கண்டு
வட்டமிட்டுத் திரிகிறது
விட்டில் இனப் பட்டாம்பூச்சி ஒன்று...

15 Sept 2016

காவிரி

கார்மேகப் புனல் காலும்
ஊர்ந்து உலாவி பாதம் பதிக்க,
குடக்கு திசையில் - நெடிய
அடுக்கிய மலையின்கண்
கூருச்சந்தலையில் ஆரோகணித்து;
மருகிப் புணர்ந்ததன் பயனாய்
சாகாவரங் கொணர்ந்த நீர்பிள்ளை
ஆகாயத்திற்கும் பூமிக்கும் பிறந்தது மகளாய்..!

10 Sept 2016

பித்தன்

சித்தம் கலங்கிய நிலைபோல
சிதிலம் கண்டு,
அமிலத்தில் அமிழ்ந்திய முகம்போல
பாழ் அடைந்து,
மறுவுரு பெற முடியாஅ
கையறு நிலையிலும்

6 Sept 2016

காதல் எண்ணங்கள்

அவளுக்கான என்னை
நான் வரையவும்,
எனக்கான அவளை
அவள் வரையவும்,
காதல் குடுவையின்
பல அடுக்குகளில்
தீரா வண்ணங்கள்
நிரம்பி வழிந்தன..

1 Sept 2016

எழுத்துப் பிழை

கடவுள் புனையும்
இயற்கையியல்
கவிதைகளில்
மனிதன்
தவிர்க்க முடியா
திருத்தவே முடியாஅ
எழுத்துப் பிழை..!