24 Dec 2016

நிகழ் ரசனை

உறைந்த அதிகாலையில்
உருகிய பனிக்கட்டிகள்
பெருமழையினை வரவேற்றிடும் தூறல்கள்..

14 Dec 2016

காதல் காபி

காதல் காபியில் கொஞ்சம்
காமம் கலந்தது கருப்பட்டியென..
தீஞ்சுவை இதுவென உணர்த்திட
முன்வந்து கமழும் மணம்போல
பாவை அவளது பார்வை
குறிப்பில் என்னென்ன மாயை?!

1 Dec 2016

Take it Easy ஊர்வசி - புதிய வடிவம்


December-01, 2016 அன்று இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள், காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஊர்வசி.. ஊர்வசி.. Take it Easy ஊர்வசி" பாடலை தற்போதுள்ள இளைஞர்களுக்கேற்றவாறு அப்பாடல் வரிகளை தகவமைத்துத் தருமாறு தனது ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.

14 Oct 2016

பிரிவில் ஒரு தூது

பனிக்காலத்தில் திரும்புவதாய் உறுதி மொழிந்தவன்
வேனில் முதிர்ந்தும் வாராமல் சென்றதெங்கே?
என்னை விட்டு என்றைக்கும் பிரிகலேன்
என்றியம்பிய மன்னவன் மறைந்ததுமெங்கே?

11 Oct 2016

நிழல்கள்

சயனங் கொள்ளாதோர் வாகனத்தில்
அயனம் அறியாதோர் பயணத்தில்
இரவியின் வெளிச்சத்திலும்
இரவின் நீள் பாதையிலும்
விலகாத நிழல்கள்..

24 Sept 2016

பட்டாம்பூச்சி

வீட்டின் மூலை ஓரத்தில்
விட்டுவிட்டு எரியும் விளக்கொளிக் கண்டு
வட்டமிட்டுத் திரிகிறது
விட்டில் இனப் பட்டாம்பூச்சி ஒன்று...

15 Sept 2016

காவிரி

கார்மேகப் புனல் காலும்
ஊர்ந்து உலாவி பாதம் பதிக்க,
குடக்கு திசையில் - நெடிய
அடுக்கிய மலையின்கண்
கூருச்சந்தலையில் ஆரோகணித்து;
மருகிப் புணர்ந்ததன் பயனாய்
சாகாவரங் கொணர்ந்த நீர்பிள்ளை
ஆகாயத்திற்கும் பூமிக்கும் பிறந்தது மகளாய்..!

10 Sept 2016

பித்தன்

சித்தம் கலங்கிய நிலைபோல
சிதிலம் கண்டு,
அமிலத்தில் அமிழ்ந்திய முகம்போல
பாழ் அடைந்து,
மறுவுரு பெற முடியாஅ
கையறு நிலையிலும்

6 Sept 2016

காதல் எண்ணங்கள்

அவளுக்கான என்னை
நான் வரையவும்,
எனக்கான அவளை
அவள் வரையவும்,
காதல் குடுவையின்
பல அடுக்குகளில்
தீரா வண்ணங்கள்
நிரம்பி வழிந்தன..

1 Sept 2016

எழுத்துப் பிழை

கடவுள் புனையும்
இயற்கையியல்
கவிதைகளில்
மனிதன்
தவிர்க்க முடியா
திருத்தவே முடியாஅ
எழுத்துப் பிழை..!

30 Aug 2016

இருள் விலக்கு

மும்மலங்களில் மூழ்கிய
அம்மண ஆத்மாவைப் போல..
அடர் மைநிற கருந்துணி
படர்ந்து கவிழ்ந்து
இருக போர்த்தப்பட்டதற் கீடாக..

31 May 2016

மீண்டும் மாறிடு

இதுநாள் வரையில்
பெண்ணென அறியப்பட்ட புரிதல்கள்
மாறுபட்டு; வேறாகி
எந்தன் உணர்ச்சிகள் அறிந்து மதிக்காத
கண்டுணராத குருட்டு சமுதாயத்திற்காக
முற்றிலுமாக மாறியப் பின்
ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொண்டிருப்பேன்..