21 Aug 2017

இயற்காதலின் இயற்கை

நீண்ட தொலைவில் நிற்கையில்
தீண்ட வியலாதவாறு – பார்வையில்
தீப்போல் தகித்து ஆகப்போவதுமென்ன?
கல்லுக்குள் ஈரமும்கனலுக்குள் தண்மையும்
உண்டென்று அறிந்துவிட்டப் பின்னரும்
சூரியனாய்ச் சுட்டு விலகிப்போவதுமென்ன..??

வான்சூரியனை
கான்மலையேறி
நெருங்க நெருங்க
வேனல் குறைவதொன்றும்
புதிர் முரணில்லை...
மலையேற ஏற
வளிமண்டல அழுத்தம்
குறைவதே இயற்கையின் விதி...!

அன்பின் கயிற்கொண்டு
உன் மனதிலேறி வருகிறேன்...
நெஞ்சழுத்தக்காரி!
நெருக்கத்தின் நுனியுச்சியில்
நெருப்புச்சூடு தணிந்து,
உறைந்தென்னில் கரைவதே
இயற்காதலின் இதி...!!

No comments:

Post a Comment