30 Aug 2016

இருள் விலக்கு

மும்மலங்களில் மூழ்கிய
அம்மண ஆத்மாவைப் போல..
அடர் மைநிற கருந்துணி
படர்ந்து கவிழ்ந்து
இருக போர்த்தப்பட்டதற் கீடாக..
அநாதி ஆழிருளில்
அமிழ்ந்து கிடந்தன யாவும்..!
இருளை இருளா லகற்ற
இரு ளென்ன முள்ளோ?
துடியொளிக் கீற்றின் முறுவலில்
ஓடி யொளியும் இருள்,
மறையுமே யன்றி அழியுமோ?
இருளைக் குற்றஞ்சுட்டி யென்ன பயன்?
இருளே இம்மாய உலகின்
இயல்பென அறிவா னறிவன்..!
நிரம்பிய இருளின்கண் ஐயெதற்கு?
நிரந்தரமாய் குன்றிட
அணையா தகளியொளி ஏற்றிடு..!
நிலைமாறா நிறையன்பு ஒளியில்
குறையிருள் வெறுப்பும்
அடங்கி ஒடுங்கிடாதோ?!
உமிழ் வெறுப்பை உமியென நீக்கி
உண்மைப் பொருளை உணர்ந்து உவந்திட
அன்பு செய்!
அவமுக நீயும் சந்ததம்
அன்பு செய்!!

No comments:

Post a Comment