23 Feb 2017

கடவுளின் இருப்பிடம்

கடவுள் இருக்கிறாரா?
ஆம், கடவுள் இருக்கிறார்..
கடவுள் இருக்கிறாரா?
இல்லை, கடவுள் இல்லை..
வெவ்வேறு நபர்களின்
ஒரு வினாக்கு
முரண்பட்ட இரு விடைகளா?
இருந்தும் இரண்டும் சரியே..
கடவுளென்ன
ஆமுக்கும் இல்லைக்கும்
இடையில் தொக்கி
ஒளிந்து ஒளிர்கின்றாரா?
அவர் அங்கில்லை..
கடவுள் எங்கே இருக்கிறார்?
வினவியர்களின்
மன முழுமையில்
தேடிப் பாருங்கள்..
ஒருவேளைக் கிடைக்கக் கூடும்...!

No comments:

Post a Comment