10 Feb 2017

மெய் எனும் பொய்

தன்மேல் படிந்துள்ள
கறை நீக்க
மாபொய் பொய்கையிலே
வந்து விழுகிறது
ஒரு மெய்..

அதிலிருந்ததோர்
பொய்யைக் கிள்ளி
தம்மீது போர்த்திக்கொண்டு
அதற்கும் மெய்யென்றே
பெயரிட்டுக் கொண்டு
சாமர்த்தியமாய் ஏமாறத் தொடங்கியது..

காலப்போக்கில் மெய்
காணும் அத்தனை பொய்யையும்
மெய்யெனதில் மையல் கொண்டு
பொய்ச்சாயத்திலே ஊறித் திளைத்தது..

கூற்றுவன்
அரைகூவலில்
அரைகுறையென
சலவை முடித்து
சால்வை விடுத்து
புதிய கறைகளுடன்
பறந்து சென்றது..

நன்றி கெட்ட மெய்
எங்கே
சென்றுவிடப் போகிறது?
மறுபடியும் மெய்
பொய்யை நாடி
வந்துத் தீரத்தானே வேண்டும்?!
பொய்யின்றி நிலையாது மெய்..
இதில்
கடவுளென்ன?
கருமாந்திரக் காதலென்ன?

No comments:

Post a Comment