1 Dec 2016

Take it Easy ஊர்வசி - புதிய வடிவம்


December-01, 2016 அன்று இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள், காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஊர்வசி.. ஊர்வசி.. Take it Easy ஊர்வசி" பாடலை தற்போதுள்ள இளைஞர்களுக்கேற்றவாறு அப்பாடல் வரிகளை தகவமைத்துத் தருமாறு தனது ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.


இதோ, அதற்கான வடிவம் எனது வரிகளில்:


சரணம்-1:
Stalk பண்ண பொண்ணும், Block பண்ணி போனா - Take it Easy Policy
Tatkal Time-ல, Server Down'ஆனா - Take it Easy Policy
புரட்டாசி மாசம், பிரியாணி விருந்தா - Take it Easy Policy
Fan காத்தில் படுத்தும், கொசு வந்து கடிச்சா - Take it Easy Policy

இளமையில் காதல் கொள்ளாது
இள மயில் இங்கே கிடையாது..
கவிதையின் மொழிகள் தெரிந்தாலும்
யுவதிகள் மௌனங்கள் புரியாது..!

உளமதில் கடவுளைக் காணாது
சிலைகளை வணங்கி பயன் யாது?
பெண்மையை மதித்துப் போற்றாமல்
ஆண்மைக்கும் அழகும் இங்கேது??!

(ஊர்வசி.. ஊர்வசி.. Take it Easy ஊர்வசி........)

சரணம்-2:
Facebook'ல் Daddy, Request கொடுத்தா - Take it Easy Policy
OC Wi-Fi'கு Password பூட்டா - Take it Easy Policy
Correct பண்ண figure'ம், Friendzone பண்ணா - Take it Easy Policy
Revalue போட்டும் Arrear வந்தா - Take it Easy Policy

விழியிலே கனவை நிரப்பாமல்
மனதிலே தீயை ஏற்றுவிடு..
வழியிலே தடைகள் நிறைந்தாலும்
விசையிலே திசைகள் அளந்துவிடு..!

ஒருமுறை உதைத்து வீழ்ந்தாலும்
மறுமுறை எதிர்த்து நின்றுவிடு..
(அ)
இடியொலி கேட்டினும் துவளாமல்
கொடிமலர் அரும்பி பூப்பதுபோல்..
அயர்ச்சியில் நீயும் தளராமல்
முயற்சியில் வெற்றியை கண்டுவிடு..!!

No comments:

Post a Comment