6 Sept 2016

காதல் எண்ணங்கள்

அவளுக்கான என்னை
நான் வரையவும்,
எனக்கான அவளை
அவள் வரையவும்,
காதல் குடுவையின்
பல அடுக்குகளில்
தீரா வண்ணங்கள்
நிரம்பி வழிந்தன..
சுயவோவியம் சலித்து
சகிக்காத சகியாகி
அவள் எண்ணங்களின்
கற்பனைகளில்
என் பிம்பத்தை
கோடுகளாகவும் சுழிவுகளாகவும்
சிரத்தையுடன் கிறுக்கி
ஓவியமென வரைந்தாள்..
ஏனோ அதில்
நிறங்களைத் தீட்ட
எவ்வளவு முயன்றும்
அவளால் இயலவில்லை..!

No comments:

Post a Comment