3 Jan 2017

கனவு விடு தூது

முழுநிலா இரவொளியில்
விழுபனி வெண்மூட்டத்தில்
எழில் மேவும் மிளையில்
புல் மேயும் மிளா போல்
கான தேவதையவள்
கானல் கனவில்
பவனி வருகிறாள்..

அழகிய மதியவன்தன்
பொலிந்த மகளோ இவள்?!
மனக்கரையினில்
பொழுதும் கரையும்
அலையாசைகளில்
அனுதினம் தோன்றி மறைகிறாள்..

ஒளிஇல் இருளில்
மிளிர்ந்து மின்னிடும்
அவள்இரு திருவிழிகள்..
விட்டில் சிட்டென
கட்டவிழப் பறந்திடும்
என்நூறு எண்ணங்கள்..

நிழல்மாயப் புதிர் விடுத்து
நிகழ்கால விதி தொடுத்து
என்இடம் வந்தால் - நின்னையே
வலம் வருவேன் என்றொரு
தூதினை விடுக்கிறேன்..

அத்தனையும் கலைந்து
விழித்தெழுகையில்
தூது சென்ற புறா
பகலவனின் பகலில்
மறையாது பறந்து கொண்டிருந்தது..!

17 comments:

  1. கவிதை நன்று! நண்பா !!
    -ராம்குமார்

    ReplyDelete
  2. அருமையான வரிகள் வேதா.

    ReplyDelete
  3. அருமையான வரிகள் வேதா.

    ReplyDelete
  4. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கவிதை சிறப்பு ...... நீங்கள் தமிழை பற்றியும் தமிழ்நாட்டை பற்றியும் எழுத வேண்டும் .... வேண்டுகோள் ...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக! அன்பிற்கு நன்றி :)

      Delete
  6. அருமை
    அருமை
    தொடருங்கள் நண்பரே
    தொடர்கிறேன்

    ReplyDelete
  7. அத்தனையும் கலைந்து
    விழித்தெழுகையில்------அருமை...

    ReplyDelete